உலகம்

ஹிஸ்புல்லாவின் முக்கிய சுரங்கப்பாதை தகர்ப்பு – 4.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவு

லெபனானில் ஹிஸ்புல்லா போராளிக் குழுவினால் கட்டப்பட்ட சுரங்கப்பாதையை இஸ்ரேலிய துருப்புகள் வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய படைகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கையைத் தொடரவும், ஹிஸ்புல்லா மற்றும் கூடுதல் இடங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலியப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹிஸ்புல்லா  கட்டளை மையம், வசிப்பிடங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை வைத்திருந்த, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் Ali al-Taher  மலைத்தொடரின் கீழ் இருந்த ஒரு பரந்த சுரங்கப்பாதையே இவ்வாறு வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

மேற்படி சுரங்கப்பாதை தாக்கப்பட்டதை தொடர்ந்து 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்