இந்தியா இலங்கை செய்தி

வலுவடைகிறது இலங்கை, இந்திய பாதுகாப்பு உறவு

இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும், பல்வேறு துறைகளில் விரிவடைந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு வரலாறு இருப்பதாகவும், பல்வேறு முன்னெடுப்புகள் தொடர்ந்து வடிவம் பெற்று வருவதாகவும் கூறினார்.

இந்த ஒத்துழைப்பில் பயிற்சி அளித்தல், திறன் மேம்பாடு, இராணுவ கருவிகளை வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“விமானங்கள் முதல் கப்பல்கள் மற்றும் உலர் கப்பல்துறைகள் (dry docks) வரை, பல்வேறு வகையான உதவி மற்றும் ஒத்துழைப்பு செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் ஒத்துழைப்பின் மூலம், பாதுகாப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை