உலகம்

ஏதென்ஸில் இடிந்து விழுந்த கட்டிடம் – ஒருவர் பலி, பலர் மாயம்

மத்திய ஏதென்ஸின் சுற்றுலாப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 05 பேர் மாயமாகியுள்ளனர்.

ஒரு குடியிருப்பில் தங்கியிருந்த முதிய தம்பதியினரும், மற்றொரு குடியிருப்பில் தங்கியிருந்த சில சுற்றுலாப் பணிகளும் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை மீட்பு நாய்களின் உதவியுடன் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெடி விபத்துக்கான காரணம் இனங்காணப்படவில்லை என்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்