எகிப்தில் கோர விபத்து – 16 பேர் பலி
எகிப்தில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சினாய் தீபகற்பத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




