ஆஸ்திரேலியா செய்தி

ஹண்டா வைரஸ்: ஆஸ்திரேலியர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு!

MV Hondius என்ற சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் (Hantavirus) பரவியதை அடுத்து, அதில் பயணம் செய்த ஆஸ்திரேலிய பிரஜைகளை தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தொற்று பாதிப்பு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் பெர்த் நகருக்கு அருகில் உள்ள புல்ஸ்ப்ரூக் (Bullsbrook) தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட உள்ளனர்.

இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவது அரிதானது என்றாலும், அதன் தீவிரத்தன்மை காரணமாக அவர்களுக்கு மூன்று வார கால கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இவர்களை வைத்தியசாலை பிரிவில் வைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது விரிவான வசதிகள் கொண்ட சிறப்பு மையத்திற்கு மாற்றும் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட பாதுகாப்பு கவசங்களுடன் கூடிய விமானம் மூலம் அவர்கள் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் சர்வதேச தரத்தை விட மிகக் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!