இலங்கை செய்தி

பருத்தித்துறை பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த வன்முறை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் யார் என இதுவரை தெரியவரவில்லை.

இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content