இந்தியா செய்தி

கழிவறை தொட்டியில் இரும்பு பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள்; மகளை கைது செய்த பொலிஸார்!

மும்பையில் பெண்ணின் உடல் பாகங்கள் கழிவறை தொட்டியில் கண்டறியப்பட்டதை அடுத்து அவரது மகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையின் லால்பாக் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தனது தாயைக் கொன்றதாக கூறப்படும் ரிம்பிள் ஜெயின் என்ற 23 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.மும்பையிலுள்ள அவரது வீட்டிலுன் அலமாரியில் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடலைக் கண்டெடுத்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரிம்பிள் ஜெயினின்  தாயான வீணா ஜெயினின் உடல் பாகங்களான எழும்பு மட்டும் சதை துண்டுகள் அடைக்கப்பட்ட இரும்புப் பெட்டி கழிவறை தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல் துறை அவரது மகள் ரிம்பில் ஜெயினை கைது செய்து விசாரித்து வருகிறது. இன்னும் கொலைக்கான காரணங்களும், எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதற்கான தகவல்களும் தெரியவில்லை.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி