நேட்டோ அமைப்பின் அவசியத்துவத்தை வலியுறுத்திய மன்னர்!
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நேட்டோ கூட்டணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நோட்டோ உதவவில்லை என ட்ரம்ப் விமர்சித்துவருகின்றார். குறித்த அமைப்பை காகிதப் புலி எனக்கூட விளாசித் தள்ளி இருந்தார்.
இந்நிலையிலேயே நேட்டோவுக்கு ஆதரவாக மன்னர் குரல் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு நேட்டோவின் பாதுகாப்பு ஒப்பந்தம் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மன்னர், தற்போதைய சவாலான உலகச் சூழலில் இந்த ஒற்றுமை அவசியம் என்பதையும் எடுத்துரைத்தார்.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் மன்னருக்கிடையில் சுமுகமான சந்திப்பு நடந்தாலும், சர்வதேசக் கொள்கைகளில் அவர்களுக்குள் நிலவும் மாறுபட்ட அணுகுமுறைகளை இரு தரப்பு கருத்துகள் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.





