ஆசியா செய்தி

சவூதியில் நடந்த விபத்தில் ஒன்பது யாத்ரீகர்கள் பலி

சவூதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் ஒன்பது பாகிஸ்தானிய உம்ரா யாத்ரீகர்கள் இறந்தனர் மற்றும் மேலும் நான்கு பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரேபிய ஊடகங்களின்படி, பாகிஸ்தான் குடிமக்கள் உம்ராவை முடித்துவிட்டு ரியாத் திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இறந்தவர்கள் சுல்பிகர் அலி, ஷாபாஸ் அலி மற்றும் அவரது மனைவி உம்மு அமரா, அமரியா பீபி, ஹரேம் பாத்திமா, முஹம்மது தாவுத், அபு ஸார், தெஹ்ரீம் பாத்திமா மற்றும் ஹரிம் பாத்திமா என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் சவுதி அரேபியா சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி