ஐரோப்பா

2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆட்சியை தக்கவைக்குமா தொழிற்கட்சி?

பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இடைத்தேர்தலில் குடியேற்றத்திற்கு எதிரான ‘ரிஃபார்ம் யுகே’ கட்சி  வேட்பாளரின் சவாலை முறியடித்து, மற்ற இடதுசாரி அரசியல் கட்சிகளின் வாக்குகளையும் அவரால் திரட்ட முடிந்தது.

இந்நிலையில் பிரதமராக பதவியேற்கவும், தொழிலாளர் கட்சிக்கு தலைமை தாங்குதவதற்கான ஆளுமை அவரிடம் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவருடைய தலைமையில் ஆட்சி அமைந்தால் வரும் 2029 ஆம் ஆண்டு இடம்பெறும் பொதுத் தேர்தலில்  தொழிலாளர் கட்சி 50 சதவீதமான வாக்குகளை பெறும் எனவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தனது இராஜினாமா உரையை நிகழ்த்திய ஸ்டாமர் பர்ன்ஹாமின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சியை வழிநடத்த அவர் சிறந்த நிலையில் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்