பொழுதுபோக்கு

எங்களுக்கு கல்யாணமா? வதந்திக்கு பதிலடி கொடுத்த விஷால்

விஷால் சில வருடங்களுக்கு முன் அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார். இவர்களுடைய பந்தம் நிச்சயதார்த்தம் வரை போனது.

ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு போகாமல் பாதியிலேயே முறிந்து விட்டது.

இப்படி விஷால் உடைய திருமண வாழ்க்கை பலபேர் பேசும் பொருளாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 46 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் சிங்கிளாகவே சுற்றி வருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு விஷால் மற்றும் லட்சுமிமேனன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த விஷயம் நம்பும் படியாக தான் அனைவரும் பார்க்கப்பட்டு வந்தார்கள். காரணம் விஷால் மற்றும் லட்சுமிமேனன் சேர்ந்து ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதனால் இவர்கள் காதலித்திருக்கலாம் என்றும், லட்சுமிமேனனுக்கு தற்போது பட வாய்ப்புகள் அமையாது தான் விஷாலை திருமணம் செய்யப் போவதாக அனைவரும் நம்பும்படியாக அமைந்துவிட்டது.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது விஷால் சமூக வலைதளத்தில் இவருடைய பதிலை அளித்திருக்கிறார்.

அதாவது பொதுவாக என்னைய பற்றி ஏதாவது வதந்திகள் வந்தால் நான் அதை நினைத்து கவலைப்பட மாட்டேன். ஆனால் இது நடிகை என்பதையும் தாண்டி ஒரு பொண்ணோட வாழ்க்கை என்பதை மறந்து விட்டு இமேஜை கெடுக்கும் படியான எந்த ஒரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.

எனக்கான நேரம் காலம் கூடி வரும் போது என்னுடைய திருமணம் நடக்கும் என்று சொல்லி வதந்திகள் அனைத்துக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

(Visited 12 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content