செய்தி விளையாட்டு

வினிசியஸ் ஜூனியர் ஹாட்ரிக் – டார்ட்மண்டை வீழ்த்திய ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் இன்று நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கடந்த ஆண்டு வெற்றியாளரான ரியல் மாட்ரிட் மற்றும் பொருசியா டார்ட்மண்ட் அணிகள் மோதின.

ஆரம்பத்தில் முதல் பாதியில் டார்ட்மண்ட் அணி திறமையாக விளையாடி, Donyell Malen மற்றும் ஆங்கிலேய வீரர் Jamie Gittens 2 கோல்கள் அடித்து அணியை முன்னிலை படுத்தினர்.

இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடிய ரியல் மாட்ரிட் அணி 5 கோல்களை அடித்து மாட்ரிட் ரசிகர்களை உச்சகப்படுத்தியது.

அன்டோனியோ ருடிகர் 60வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார், இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு வினிசியஸின் கோல் மூலம் போட்டி 2-2 என்ற கணக்கில் சமன் பெற்றது.

பின்னர் கேப்டன் லூகாஸ் வாஸ்குவேஸ் 83வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் ரியல் மாட்ரிட் அணி முன்னிலை பெற்றது.

இறுதியாக வினிசியஸின் இரண்டு தாமதமான கோல்
மூலம் ரியல் மாட்ரிட் அணி பொருசியா டார்ட்மண்டை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி