பொழுதுபோக்கு

மகனுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி…

மகன் சூர்யா சேதுபதிக்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீடியாக்களிடம் மன்னிப்பு கேட்ட விஷயம் தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். ஏற்கனவே பட அறிமுக விழாவில் எக்கச்சக்க பேச்சு பேசி எல்லாம் ஏடாகூடமானது.

தற்போது பிரமோஷன் விழாவில் சூர்யா சேதுபதி பபுள்கம் மென்று கொண்டே எல்லோரிடமும் பேசிய வீடியோ பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது.

எந்த பக்கம் பார்த்தாலும் நெட்டிசன்கள் இந்த வீடியோக்களை வைத்து கிண்டல் கேலி செய்து கொண்டு இருந்தார்கள்.

இப்படி ஒரு சமயத்தில் தான் இந்த மாதிரியான வீடியோக்களை உடனே தங்களுடைய தளத்திலிருந்து நீக்க வேண்டும் என மிரட்டல் வருவதாக மீடியாவில் பேசப்பட்டது.

மேலும் இந்த மிரட்டல் விஜய் சேதுபதியால் தான் நடக்கிறது என்றும் ஆரம்பத்தில் பேசப்பட்டது.

இதற்கு விஜய் சேதுபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். தங்கள் தரப்பிலிருந்து மிரட்டுவது போல் ஏதாவது போன் கால் வந்திருந்தால் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் என விஜய் சேதுபதி பேசியிருப்பது, இவருக்கா இந்த நிலைமை என்ற பரிதாபத்தை தான் கொடுக்கிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்