பொழுதுபோக்கு

எதிர்பார்த்ததை விட மகத்தான வெற்றி!! வித்தியாசமான முறையில் கொண்டாடிய விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன திரைப்படம் பிச்சைக்காரன் 2 மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியானது. பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்திற்கு இணையாக இப்படம் இல்லாவிட்டாலும், பேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக கதையம்சம் அமைந்திருந்ததால், கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தமிழ் நாட்டைவிட தெலுங்கில் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இரண்டாவது வாரமாக வெற்றிநடை போட்டு வரும் இப்படம் இதுவரை 30 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. தான் எதிர்பார்த்ததை விட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், நடிகர் விஜய் ஆண்டனியும், பிச்சைக்காரன் 2 படக்குழுவும் செம்ம ஹாப்பியாக உள்ளார். விரைவில் பிச்சைக்காரன் படத்தின் 3-ம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில், விஜய் ஆண்டனி வித்தியாசமான முறையில் பிச்சைக்காரன் 2 படத்தின் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடி உள்ளார். அதன்படி பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்து பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார் விஜய் ஆண்டனி. கடந்த சில தினங்களுக்கு முன் பிச்சைக்காரர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி இருந்த விஜய் ஆண்டனி, தற்போது நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்து சென்று, அவர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். பிச்சைக்காரர்களுக்கு விஜய் ஆண்டனியே தன் கையால் பிரியாணியை பரிமாறி இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகளையும் வழங்கி அவர்களின் பசியாற்றி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content