உலகம்

பொதுமக்கள் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை – 153 பேர் உயிரிழப்பு

2025-ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளால் 153 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 243 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்டகனின் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பென்டகன் அறிக்கையில்,2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு எதிரான அனைத்து இறப்பு மற்றும் காயங்களும் ஏமனில் அமெரிக்கா நடத்திய மூன்று தாக்குதல்களால் ஏற்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

ஏமனில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களும் “பெரும்பாலும்” பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மதிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியது.

மேலும், அரசு சாரா அமைப்புகள் மூலம் பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், பிப்ரவரி 2026 நிலவரப்படி, ஏமனில் நடந்த மேலும் 15 சம்பவங்களை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும்  பென்டகன் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்