பொழுதுபோக்கு

தக் லைஃப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ லாஞ்ச்… அதிரடி அறிவிப்பு

37 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணையும் படம் ‘தக் லைஃப்’. இப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், அபிராமி, நாசர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் படத்திலிருந்து விலகினர்.

துல்கருக்குப் பதிலாக சிம்பு நடிக்கிறார். அதேபோல் ஜெயம் ரவிக்கு பதில் அசோக் செல்வன் நடித்துள்ளார். மணிரத்னத்துடன் வழக்கமாகப் பணியாற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தான் இப்படத்திற்கும் இசையமைத்து உள்ளார்.

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மே 17ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கான புது தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 24-ந் தேதி சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் மே 17ந் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. படமும் திட்டமிட்டபடி ஜூன் 5ந் தேதி வெளியாகும் என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்