சுவிட்ஸர்லாந்தின் நடுநிலை கொள்கை – அடுத்த மாதம் பொது வாக்கெடுப்பு
சுவிட்ஸர்லாந்தின் நடுநிலைமை வடிவத்தை அங்கீகரிப்பதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
வாக்காளர்கள் இந்த முன்மொழிவை நிராகரிப்பார்கள் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய ஒரு கருத்துக் கணிப்பில் 62 சதவீதமானோர் எதிராகவும், 36 சதவீதமனோர் ஆதரவாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1815 முதல் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, 1848 முதல் நாட்டின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் சுவிஸ் நடுநிலைமை கொள்கை, சுவிட்ஸர்லாந்தை இரண்டு உலகப் போர்களிலிருந்தும் காப்பாற்றியிருந்தது.
ஆனால், 2022-ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்காக சுவிட்சர்லாந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால், இந்த நிலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை காரணமாக 200 ஆண்டுகளாக அமுலில் உள்ள கொள்கை தொடர்பில் மக்கள் இடையே முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.




