இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி 18 வீதத்தால் அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில்  இலங்கை ரூபாய் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதே காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1 வீதத்தாலும் ஸ்டெர்லிங் பவுண்டுடன் 15.4 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.

இதேநேரம் யூரோ நாணயத்துடன் ஒப்பிடும்போது 17.5 வீதத்தாலும் இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது 18.7வீதத்தாலும் ரூபாயின் பெறுமதி உயர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்