ஐரோப்பா

இங்கிலாந்தில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இங்கிலாந்தில் இடிந்து விழக்கூடிய காங்கீரிட்டால் கட்டப்பட்டுள்ள  பாடசாலைகளின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30 திகதிவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 147 பாடசாலைகளே இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், 174 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் குறித்த புள்ளிவிபரம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த எண்ணிக்கை உயருக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அரசாங்கம் “எச்சரிக்கையான அணுகுமுறையை” எடுத்து வருவதாக கல்விச் செயலாளர் கில்லியன் கீகன் கூறினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்