பொழுதுபோக்கு

சாண்டியின் “கிப்ட்” படத்தின் முதல் தோற்றம்.. இதோ

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் கிப்ட் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

பிரேமம், நேரம் ,கோல்ட் போன்ற படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இவர், அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

கிப்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். அல்போன்ஸ் புத்திரன், இளையராஜா, சாண்டி என ஒரு வித்தியாசமான காம்போவில் இப்படம் உருவாகி வருகிறது.

இதில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து கோவை சரளா, சஹானா சர்வேஷ், ராகுல், சார்லி, ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில், படத்தின் முதல் தோற்றத்தை காணொலியுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content