இந்தியா

கொள்ளையர்களிடம் இருந்து செல்போனை காப்பாற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி!

தெலுங்கானாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது செல்போனை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முயன்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

முன்னதாக ஐதராபாத்தில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றும் ஸ்ரீகாந்த் நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் ரெயில் ஏறினார். சாதவாகனா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரங்கலுக்கு சென்று கொண்டிருந்த அவர், கம்பார்ட்மென்ட் வாசலில் உட்கார்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

காசிப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கொள்ளையர்கள் அவரது செல்போனை பறிக்கும் நோக்கத்தில் கட்டையால் தாக்கினர். இந்த நிலையில் கீழே விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற ஸ்ரீகாந்த் தண்டவாளத்தில் தவறி விழுந்து ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே