இலங்கை

இலங்கை : ஓய்வூதியதார்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில் ஓய்வூதியதார்களுக்கு  1000 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கைகள் அமைச்சின் செயலாளர்களினால் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, செப்டம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய கொடுப்பனவு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அரசாங்க ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், உத்தரவை மீறி உரிய கொடுப்பனவை வழங்குமாறு சுற்றறிக்கையை வெளியிடுவது தேர்தல் சட்டத்திற்கு எதிரானது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்