இந்தியாவில் 116-118°F வெப்பநிலை பதிவு!! இரவில் பணிப்புரியும் மக்கள்!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மே மாதம் முழுவதும் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அங்கு 47-48°C (116-118°F) அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனால் இந்தியாவில் அதிஉச்சபட்ச வெப்பநிலை பதிவான மாநிலமாக உத்தரப் பிரதேச மாநிலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பலர் கட்டுமானம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்கின்ற நிலையில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஏற்ப மக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் உச்சபட்ச வெப்பநிலை காரணமாக மக்கள் தங்களின் அன்றாட செற்பாடுகளை இரவு நேரத்திற்கு மாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




