உலகம் செய்தி

பாதுகாப்புத்துறை ஏற்றுமதியில் சாதனை படைத்த இஸ்ரேல்!

இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் $19.2 பில்லியன் என்ற முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையை எட்டியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்போதைய போர்க்களங்களில் இந்தத் தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதால், சர்வதேச அளவில் இவற்றுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது என போர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகள் இஸ்ரேலிய பாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவதில் முன்னணியில் உள்ளன.

இஸ்ரேலின் ராணுவத் தொழில் நுட்பம் உலக சந்தையில் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை ஏற்றுமதி அதிகரிப்பு புலப்படுத்துகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!