குளிர்காலத்தை கடக்க பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை கோருகிறார் ஜெலென்ஸ்கி
குளிர்காலத்தில் ரஷ்யா தீவிரமான தாக்குதல்களை முன்னெடுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்குமாறு உக்ரைன் கோரியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, குளிர்காலத்தைக் கடப்பதற்கு அமெரிக்காவின் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளில் ஐந்து சதவீதமும், ரஷ்யாவின் அனைத்து பாலிஸ்டிக் எறிகணைகளையும் அழிப்பதற்கு 10 சதவீதமும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா சமீபகாலமாக, உக்ரைனின் தலைநகரான கீவ் மீது வாரத்திற்கு ஒருமுறை எனத் தொடர்ச்சியாகப் பெரும் தாக்குதல்களை நடத்தி […]



