இந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை: ஐ.நா வரவேற்பு
பல பத்தாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்களாகவே முன்வந்து தாயகம் திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை ஐ. நா. சபை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்ச் தனது எக்ஸ் (X) தளத்தில், “பாதுகாப்பான மற்றும் கண்ணியமான முறையில் தாயகம் திரும்புவதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்கிறேன். இவர்கள் தாயகம் திரும்புவதற்கும் மறுவாழ்வு […]













