இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. இலங்கை செய்தி

குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்றம்: கண்ணீர்புகை பிரயோகம் – படைகள் குவிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. இன்று காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, சிறைச்சாலையின் மருத்துவமனை கைதிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினரால் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உடனடியாக […]

இலங்கையில் தொடரும் சிறைச்சாலை மோதல்: ஆறு கைதிகள் காயம் இலங்கை செய்தி

இலங்கையில் தொடரும் சிறைச்சாலை மோதல்: ஆறு கைதிகள் காயம்

  • August 7, 2026
  • 0 Comments

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றிரவு 10.40 மணியளவில் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் குழப்பங்களில் ஈடுபட்டதை அடுத்து மேலதிக காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைச் சுவருக்கு மேலாக வீசப்பட்ட போதைப்பொருள் பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதை அடுத்து, […]

இஸ்ரேலிய அரசாங்கம் அமைதியை விரும்புவதாகத் தெரியவில்லை - என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan பகிரங்கமாக விமர்சித்துள்ளார். உலகம் செய்தி

அமைதியை விரும்பாத இஸ்ரேல்: துருக்கி கடும் விசனம்

  • August 6, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய அரசாங்கம் அமைதியை விரும்புவதாகத் தெரியவில்லை – என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan பகிரங்கமாக விமர்சித்துள்ளார். சிரிய வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களை அவர் கண்டித்துள்ளார். குறிப்பாக, அமைதி உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், காசா மற்றும் மேற்குக் கரையில் முன்னெடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் அமைதியற்ற போக்கையே வெளிப்படுத்துவதாகவும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலையும், […]

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஈரானில் இறுக்கமடையும் பாதுகாப்புக் கட்டுப்பாடு: 56 பேருக்கு மரண தண்டனை

  • August 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இதற்கமைய தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் படையினரும் மதப் பொலிஸாரும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கட்டாய ஹிஜாப் ஆடைக்கட்டுப்பாடு, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடைகள் மற்றும் அரசுக்கு எதிர்ப்பாகக் கருதப்படும் நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக “உள்நாட்டு ஒற்றுமையை” பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஈரான் அதிகாரிகள் […]

யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: 500ஐ நெருங்கியது எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை

  • August 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 45ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 மனித எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதையடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 494 […]

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்ட படகில் இருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கைக் கடற்பரப்பில் தவித்த 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

  • August 6, 2026
  • 0 Comments

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்ட படகில் இருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற குறித்த படகு, இயந்திரக் கோளாறு காரணமாக நெடுந்தீவு குயின் ரவஸ் பகுதிக்கு அருகில் உள்ள கலப் பகுதிக்குள் அகப்பட்டுள்ளது. இதனால் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் உதவி கோரியுள்ளனர். எனினும், கடல் வற்றுப்புக் காணப்பட்டதனால் கடற்படையினரின் படகுகளோ அல்லது ஏனைய மீன்பிடிப் படகுகளோ குறித்த பகுதிக்குச் செல்ல […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் எழுந்தமானமாக் குழிகளை வெட்டி ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

  • August 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள் தொடர்பான நிர்வாக ரீதியான கலந்துரையாடல் மற்றும் திறந்த நீதிமன்ற அமர்வு, நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் செம்மணி அகழ்வாய்வுத் தளத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கலாண்டியா அகதிகள் முகாமிகள் இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகம் செய்தி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படை அடாவடி: 60 பேர் கைது

  • August 6, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கலாண்டியா அகதிகள் முகாமிகள் இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதுடன், அவர்களின் சொத்துக்கள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் இத்தகைய வன்முறை மற்றும் சித்திரவதை நடவடிக்கைகளால் இதுவரை […]

மாணவர் தலைமையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா தான் மீண்டும் தாயகம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாயகம் திரும்புவேன்: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சூளுரை

  • August 6, 2026
  • 0 Comments

மாணவர் தலைமையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா தான் மீண்டும் தாயகம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கைது, சிறைத்தண்டனை அல்லது மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும், தனது ஆதரவாளர்களை விட்டுத் விலகி இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், தொலைபேசி (ஆடியோ) வாயிலாகச் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

22 ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டமூலம் குறித்துப் பேராயருக்கு விளக்கமளிப்பு!

  • August 6, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் இன்று (06) பேராயரைச் சந்தித்து, இந்த உத்தேச சட்டமூலம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், “மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், மக்கள் ஆணையை மீறாத வகையிலும் […]