மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாதுகாப்பு தீவிரம்
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சூழலில் தீவிர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகச் சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார். இதனிடையே, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து ஆராய்ந்தார். நாட்டின் பல்வேறு […]













