அரசியல் இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு VIP பாதுகாப்பா?

  • July 14, 2026
  • 0 Comments

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பௌத்த மதகுருமார் உட்பட 11 தனிநபர்களுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அமைச்சரவைப் பேச்சாளரும் , அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் (14) நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு நிராகரித்துள்ளார். “ ஊடக அறிக்கைகளில் பெயரிடப்பட்டிருந்த நபர்கள் எவருக்கும் எந்தவொரு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படவில்லை. அசோக ரன்வல, […]

ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை, பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக விமான நிறுவனங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பா செய்தி

ஏவுகணை ஆபத்து: வளைகுடா வான்பரப்பு குறித்து EU எச்சரிக்கை

  • July 14, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை, பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக விமான நிறுவனங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் வான்வெளியைத் தவிர்க்குமாறு இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இப்பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், சிவில் விமானங்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வரும் ஜூலை 29 ஆம் திகதி வரை இந்த தற்காலிகத் தடை அமுலில் இருக்கும் […]

"தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை." அரசியல் இலங்கை செய்தி

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை: சஜித் அணி

  • July 14, 2026
  • 0 Comments

” தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகள், மாகாண […]

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பாதுகாப்பு அச்சுறுத்தல் அமைப்பாக பிரித்தானியா அறிவித்துள்ளமை நியாயமற்றது:பொறுப்பற்றது - என சுட்டிக்காட்டி, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது ஈரான் வெளிவிவகார அமைச்சு. ஐரோப்பா செய்தி பொழுதுபோக்கு

சர்வதேச சட்டங்களை மீறிவிட்டது பிரித்தானியா: ஈரான் கடும் கண்டனம்

  • July 14, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பாதுகாப்பு அச்சுறுத்தல் அமைப்பாக பிரித்தானியா அறிவித்துள்ளமை நியாயமற்றது:பொறுப்பற்றது – என சுட்டிக்காட்டி, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது ஈரான் வெளிவிவகார அமைச்சு. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) என்பது ஈரானிய ஆயுதப் படைகளின் அதிகாரப்பூர்வமான ஒரு அங்கமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சு, ஒரு நாட்டின் அரசு நிறுவனத்தை இவ்வாறு இலக்கு வைப்பதன் மூலம் பிரித்தானியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்களது உளவு வேலைகள் […]

ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎல் (ISIL) அமைப்பைச் சேர்ந்த இருவருக்கு இன்று மரண தணடனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகம் செய்தி

ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதி:இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • July 14, 2026
  • 0 Comments

ஈரானில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎல் (ISIL) அமைப்பைச் சேர்ந்த இருவருக்கு இன்று மரண தணடனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎல் (ISIL) பயங்கரவாத அமைப்பு வீழ்ச்சியடைந்த பிறகு, ஈரானுக்குள் மீண்டும் தங்களது வலையமைப்பைக் கட்டமைத்து, தாக்குதல்களை நடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்களாக மொஹியதின் அப்துல்லாஹி மற்றும் ஹொசைன் பலானி ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். ஈரான்-ஈராக் எல்லையில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாமு (Bamu) மலைப்பகுதியில் தங்களது […]

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், அந்த முக்கிய நீர்வழியில் பாதுகாப்பான போக்குவரத்தை மீட்டெடுக்குமாறு அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை: சீனா விடுத்துள்ள அவசர அழைப்பு

  • July 14, 2026
  • 0 Comments

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், அந்த முக்கிய நீர்வழியில் பாதுகாப்பான போக்குவரத்தை மீட்டெடுக்குமாறு அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. “ஹார்முஸ் நீரிணையில் இயல்பான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை எவ்வளவு விரைவாக மீட்டெடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக மீட்டெடுப்பது சர்வதேச சமூகத்தின் பொதுவான விருப்பமாகும்” என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் (Lin Jian) […]

செய்தி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு?

  • July 14, 2026
  • 0 Comments

தமிழ் பேசும் கட்சிகளுக்கான பொதுமேடையில் ஏனைய தமிழ் பேசும் கட்சிகளை இணைப்பதற்கு முயற்சி எடுக்கப்படும். அவர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள பொதுமேடைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்வாங்கப்படாமை தொடர்பில் ஊடக சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “பொது அமைப்புக்கான முதல் படியே நேற்று எடுக்கப்பட்டது. எனவே, ஏனைய விடயங்கள் பற்றி இனிதான் […]

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிவரை முன்னேறி தாயகம் திரும்பிய நோர்வே அணிக்கு ஒஸ்லோவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். செய்தி விளையாட்டு

வீழ்ந்தாலும் வீரர்களைக் கொண்டாடிய நோர்வே

  • July 14, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிவரை முன்னேறி தாயகம் திரும்பிய நோர்வே அணிக்கு ஒஸ்லோவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் கூடுதல் நேரத்தில் (extra-time) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நோர்வே அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது. இது அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற நோர்வேயின் கனவைச் சிதைத்த போதிலும், இத்தொடரில் தமது நாட்டு […]

ஓமான் கடல் பகுதியில் இந்திய பிரஜையொருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஈரானின் துணைத் தூதரான முகமது ஜவாத் ஹொசைனியை நேரில் அழைத்து, தனது கண்டனத்தை இந்திய அரசு பதிவு செய்துள்ளது. இந்தியா செய்தி

ஈரான் தூதுவரை அழைத்து கடும் கண்டனம் வெளியிட்டது இந்தியா

  • July 14, 2026
  • 0 Comments

ஓமான் கடல் பகுதியில் இந்திய பிரஜையொருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஈரானின் துணைத் தூதரான முகமது ஜவாத் ஹொசைனியை நேரில் அழைத்து, தனது கண்டனத்தை இந்திய அரசு பதிவு செய்துள்ளது. எண்ணெய் டாங்கர்கள்மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவே இந்தத் தூதர் நேரில் வரவழைக்கப்பட்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய தூதர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து (MEA) வெளியேறும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஓமான் கடல் பகுதியில் […]

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள அமெரிக்க இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்

  • July 14, 2026
  • 0 Comments

வளைகுடாப் பகுதியின் பிற இடங்களில், நேற்று இரவு தங்களது எல்லைகளுக்குள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் நேற்று இரவு மூன்று தனித்தனி எச்சரிக்கைகளை விடுத்து, அங்குள்ள குடியிருப்பாளர்களை உடனடியாக அருகிலுள்ள தங்குமிடங்களை நாடிச் செல்லுமாறு அறிவுறுத்தியது. அதேவேளையில், பஹ்ரைனில் உள்ள பல அமெரிக்க இலக்குகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ‘இர்னா’ […]