பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்​களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்​ளது. இந்தியா செய்தி

4 விமானங்களில் 68 தொன் நிவாரண பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா

  • August 31, 2026
  • 0 Comments

பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்​களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்​ளது. கடந்த 26-ம் திகதி நேபாளத்​தில் பெருவெள்ளம் ஏற்​பட்​டது. அன்றைய தினமே இந்​திய விமானப் படை​யின் சி-130ஜே ரக சரக்கு விமானம் மூலம் நேபாளத்​துக்கு 10 தொன் நிவாரண பொருட்கள் அனுப்​பப்​பட்​டன. கடந்த 27-ம் திகதி இந்​திய விமானப் படை​யின் சி-17 குளோப்​மாஸ்​டர் விமானம் மூலம் 37.5 தொன் நிவாரணப் பொருட்​கள் நேபாளத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்து கடந்த […]

ராக் இசை உலகின் மூத்த கலைஞர் ஆங்கிரி ஆண்டர்சனுக்கு மாரடைப்பு ஆஸ்திரேலியா செய்தி பொழுதுபோக்கு

ராக் இசை உலகின் மூத்த கலைஞர் ஆங்கிரி ஆண்டர்சனுக்கு மாரடைப்பு

  • August 31, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ‘ரோஸ் டாட்டூ’ (Rose Tattoo) பாப் இசைக்குழுவின் முன்னணிப் பாடகரும், ராக் இசைப் பிரபலமுமான ஆங்கிரி ஆண்டர்சன் (Angry Anderson) மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது இசைக்குழு திங்கள்கிழமை பிற்பகல் அறிவித்துள்ளது. 79 வயதான ஆண்டர்சன் (இயற்பெயர்: கேரி ஆண்டர்சன்) உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களது ஐரோப்பிய இசைச் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டர்சன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை […]

பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இலங்கை செய்தி

பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம்

  • August 31, 2026
  • 0 Comments

பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இவ்விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள “Global Conscious Food Systems” (உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்) உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதில் சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன், சர்வதேச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பல உத்தியோகபூர்வ சந்திப்புகளிலும் பிரதமர் […]

ஆர்க்டிக் (Arctic) துருவப் பகுதியில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தல் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆர்க்டிக் பிராந்தியத்தில் புதிய போட்டி: நேட்டோ – ரஷ்யா இடையே மோதல் சூழல்

  • August 31, 2026
  • 0 Comments

ஆர்க்டிக் (Arctic) துருவப் பகுதியில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தல் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து நேட்டோ உறுப்பு நாடுகள் அப்பகுதியில் தங்களது இராணுவப் பங்களிப்பை அதிகரித்து வரும் பின்னணியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான பதற்றமான சூழல் மற்றும் கிரீன்லாந்தை (Greenland) கையகப்படுத்துவது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

"எமது உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் நமக்கான விடுதலைக் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இலங்கை செய்தி

” உறவுகளின் கண்ணீர் விடுதலைக்கான கதவுகளை ஒருநாள் திறக்கும்”

  • August 31, 2026
  • 0 Comments

“எமது உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் நமக்கான விடுதலைக் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான நீதியை நிச்சயம் நிலைநாட்டும்” என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நடத்தி வரும் தொடர் […]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக சர்வதேச தினத்தை முன்னிட்டு “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணத்தில் நேற்று கவனயீர்ப்புப் பேரணியும் அனைத்துலக மாநாடும் இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

“நீதிக்கான நீள் பயணம்”: எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்

  • August 31, 2026
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக சர்வதேச தினத்தை முன்னிட்டு “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணத்தில் நேற்று கவனயீர்ப்புப் பேரணியும் அனைத்துலக மாநாடும் இடம்பெற்றுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் நேற்று காலை 9 மணியளவில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமாகியது. வெள்ளை வான் கடத்தல்களை நினைவுபடுத்தும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் படங்கள் பொறிக்கப்பட்ட […]

ஈரானுக்கு சொந்தமான லாராக் (Larak) தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

  • August 31, 2026
  • 0 Comments

ஈரானுக்கு சொந்தமான லாராக் (Larak) தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளுடன் கூடிய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) ஆயத்தமாவதை கவனித்ததை தொடர்ந்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க […]

இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி நாளை (31) ஆரம்பமாகி, செப்டம்பர் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை, அமெரிக்க விமானப் படைகளின் கூட்டு பயிற்சி நாளை ஆரம்பம்

  • August 30, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி நாளை (31) ஆரம்பமாகி, செப்டம்பர் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி, பேரிடர் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், நிபுணத்துவப் பரிமாற்றத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியில், 275 இலங்கை விமானப்படையினர் 69 அமெரிக்க படையினர் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 3 பங்கேற்பாளர்கள் உட்பட மொத்தம் 347 பேர் […]

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸின் (Anthony Albanese) லேபர் கட்சி (Labor Party) பல தசாப்தங்களாகத் தன் வசம் வைத்திருந்த மாநில நாடாளுமன்றத் தொகுதியை, தீவிர வலதுசாரிக் கட்சியான 'வன் நேஷன்' (One Nation) கைப்பற்றியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிரடி திருப்பம்: ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுகட்சி

  • August 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸின் (Anthony Albanese) லேபர் கட்சி (Labor Party) பல தசாப்தங்களாகத் தன் வசம் வைத்திருந்த மாநில நாடாளுமன்றத் தொகுதியை, தீவிர வலதுசாரிக் கட்சியான ‘வன் நேஷன்’ (One Nation) கைப்பற்றியுள்ளது. தேசியக் கீழவையில் தனது முதல் இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவை இக்கட்சி மீண்டும் நிரூபித்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த்தில் (Perth) தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய சீக்ரெட் ஹாபர் (Secret Harbour) தொகுதியில் […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா என்பது தொடர்பாக ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளில், 'ஆதரவு' (Yes) தெரிவிக்கும் தரப்பு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவு’ – ஐஸ்லாந்து சர்வஜன வாக்கெடுப்பு முடிவு என்ன?

  • August 30, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா என்பது தொடர்பாக ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளில், ‘ஆதரவு’ (Yes) தெரிவிக்கும் தரப்பு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தகுதிபெற்ற 2,70,000 வாக்காளர்களில் முதற்கட்டமாக எண்ணப்பட்ட 87,000 வாக்குகளின் அடிப்படையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு 51.2 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளை, 48.8 சதவீதமானோர் இதற்கு எதிராக (‘இல்லை’) வாக்களித்துள்ளனர். எனினும், […]