பாலஸ்தீனத்திற்கு கூடுதலாக 125 மில்லியன் குரோனர்களை வழங்கும் நோர்வே
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளுக்கு 125 மில்லியன் நோர்வேஜியன் குரோனர்களை (13.17 மில்லியன் டொலர்கள்) நன்கொடையாக வழங்க நோர்வே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே 01 பில்லியன் குரோனர்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், கூடுதலாக இந்த நிதியுதவியை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி வாயிலாக, இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே 2024-ல் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தது. மேலும் பாலஸ்தீனியர்களுக்கான சர்வதேச நன்கொடையாளர் குழுவின் தலைமைப் பொறுப்பையும் வகிக்கிறது. இது தொடர்பில் […]






