அணுசக்தித் திட்ட விவகாரத்தில் எந்த நெகிழ்வுத்தன்மையும் காட்டமாட்டோம் – ஈரான் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டாலும், தனது அணுசக்தித் திட்ட விவகாரத்தில் ஈரான் எந்தவித நெகிழ்வுத்தன்மையையும் காட்டாது என்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, அமெரிக்காவால் “ஈரானின் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்படும்” வரை அந்த நீர்வழிப்பாதை மூடப்பட்டே இருக்கும் என்றும் கூறினார். ஈரானின் முன்மொழிவின்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க தெஹ்ரான் முன்வந்துள்ளது. ஏழு நாட்களுக்குள் லெபனான் உள்ளிட்ட அனைத்து […]



