ஸ்கேன் அறிக்கை பணிக்கு தனியார் நிறுவனங்களை NHS அதிகம் நம்பும் நிலை – செலவு வேகமாக உயர்வு
வைத்தியசாலைகளில் நோயறிதல் ஸ்கேன்களின் பகுப்பாய்வுக்காக தேசிய சுகாதார சேவை தனியார் நிறுவனங்களுக்கு செலுத்தும் தொகை அதிகரித்து வருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. CT மற்றும் MRI ஸ்கேன்களை மருத்துவ ரீதியாக ஆய்வு செய்து அறிக்கை வழங்கும் பணியை வெளி நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதால் செலவுகள் “கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வருகிறது” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் பல மருத்துவமனைகள் வெளிப்பணி சேவைகளை அதிகம் நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் இத்தகைய சேவைகளுக்கு சுமார் 241 மில்லியன் […]













