அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இரு நாடுகளின் நிலைப்பாடுகளும் ஒருங்கிணைந்து வருவதாக தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கா முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அடித்தளமாக இருக்கும் “புரிந்துணர்வு ஒப்பந்தத்தை” உருவாக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும் பாகாயி கூறினார். இதனிடையே, ஈரானுடனான ஒப்பந்தம் “பெரும்பாலும் முடிக்கப்பட்டுவிட்டது” என்றும், அதன் விவரங்கள் விரைவில் […]













