பணமோசடி வழக்கு – டெய்சி ஃபாரஸ்ட் விடுதலை
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, டெய்சி ஃபாரஸ்ட்டை விடுவிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டதரணி, பிரதிவாதி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்று அறிவித்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம் டெய்சி ஃபாரஸ்ட்டை விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.




