உலகம்

மிச்சிகனில் F-16 ரக போர் விமானம் விபத்து

  • September 18, 2026
  • 0 Comments

மிச்சிகனில் F-16 ரக போர் விமானம் ஒன்று, நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தேசிய பாதுகாப்புப் படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெறும்போது விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், இராணுவக் கொள்கையின் காரணமாக அவரது அடையாளம் மற்றும் உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. கிராண்ட் டிராவர்ஸ் கவுண்டி அவசரகால மேலாண்மைத் துறை, கவுண்டி சாலை 633ஐ மூடியதுடன், அப்பகுதியில் வசித்த மக்களையும் தற்காலிகமாக வெளியேற்றியுள்ளது.