ஜப்பான் மற்றும் தைவானில் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வெப்பமண்டல புயலால் தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுளில் கனமழை பெய்துள்ளது. இதன்காரணமாக தைவானின் தெற்குப் பகுதியின் பெரும் பகுதியும், வடக்குப் பகுதியின் சில இடங்களும் இன்று முடக்கப்பட்டுள்ளன. அங்கு பாடசாலைகள் மற்றும், அலுவலகங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் முடங்கியதாக கூறப்படுகிறது. அதேநேரம் ஜப்பானின் பெரும்பாலான இடங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானின் முக்கிய பகுதிகளில் இருந்து 22 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.




