அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது. இலங்கை செய்தி

22 தொடர்பான விசாரணை நிறைவு: அடுத்து என்ன?

  • September 2, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் 50 இற்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக 22 இற்கு எதிராகவே அதிக மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் […]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:56,000 மாணவர்கள் சிறந்த பெறுபேறு இலங்கை செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 56,000 மாணவர்கள் சிறந்த பெறுபேறு

  • September 2, 2026
  • 0 Comments

2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 56 ஆயிரம் மாணவர்கள் மாவட்ட ரீதியிலான வெட்டுபுள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்துள்ளனர். அதாவது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 19.32 சதவீதமானோர் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். பகுதி ஒன்றில் 35 புள்ளிகள், பகுதி இரண்டில் 35 புள்ளிகள் என 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்து சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 287 ஆகும். இது 73.58 சதவீதமாகும். சிங்கள மொழியில் குருணாகலை மாவட்டத்தை சேர்ந்த மாணவரொருவர் […]

வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத் துறையில் நீடித்து வந்த நிர்வாகப் பிரச்சினைகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் உடனடி தலையீட்டின் மூலம் சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

வட மாகாண சுகாதாரத் துறை நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு

  • September 2, 2026
  • 0 Comments

வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத் துறையில் நீடித்து வந்த நிர்வாகப் பிரச்சினைகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் உடனடி தலையீட்டின் மூலம் சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதாரத் துறையின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் இடம்பெற்றது. வட மாகாணத்திலுள்ள பகுதி […]

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என்றும், இது எதிர்கால முன்னேற்றம் குறித்த கவலைகளை ஏற்படுத்துகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

பொறுப்புக்கூறலை விரைவுபடுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

  • September 2, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என்றும், இது எதிர்கால முன்னேற்றம் குறித்த கவலைகளை ஏற்படுத்துகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் எந்தவித முன்னேற்றமுமின்றி உள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித […]

22 ஐ ஆயுதமாக்கி மக்களை பழிவாங்காதீர்: ஆளுங்கட்சி கோரிக்கை இலங்கை செய்தி

22 ஐ ஆயுதமாக்கி மக்களை பழிவாங்காதீர்: ஆளுங்கட்சி கோரிக்கை

  • September 2, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, “22-ஆவது திருத்தத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் என்ன நேரும்?” என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சரவைப் பேச்சாளரும் […]

அமெரிக்கப் படைகள் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜோர்தான், குவைத், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீது ஈரான் பதிலடி தாக்குதல்

  • September 2, 2026
  • 0 Comments

அமெரிக்கப் படைகள் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜோர்தான், குவைத், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தெற்கு ஈரானின் சிரிக் பகுதியில் திருமணக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வீடு ஒன்றின் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் விழுந்ததில், குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகள் குறித்துத் தாம் […]

Some missing tourists make contact as Nepal flood death toll tops 1,100 உலகம் செய்தி

நேபாளம் வெள்ள அனர்த்தம்: பலி எண்ணிக்கை 1,118 ஆக உயர்வு

  • September 2, 2026
  • 0 Comments

நேபாளத்தில் குறைந்தது 1,118 பேரைக் பலிகொண்டதும், 3,900-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போகச் செய்ததுமான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனதாகப் பதிவான சுற்றுலாப் பயணிகள் சிலர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதிஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, இதுவரை 324 வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 39 நாடுகளைச் சேர்ந்த சுமார் 590 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாகவும் நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

அமெரிக்காவும் ஈரானும் புதன்கிழமை மீண்டும் நேரடி போர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

யுத்த களமாக மாறிய மத்திய கிழக்கு: ஈரான் கூறுவது என்ன?

  • September 2, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் ஈரானும் புதன்கிழமை மீண்டும் நேரடி போர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஈரானில் திருமண நிகழ்வு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வாஷிங்டன் மேலும் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) வான் பாதுகாப்பு மையங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை சொத்துக்கள், சுரங்கம் தோண்டும் திறன்கள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது செவ்வாய்க்கிழமை […]

நேட்டோ அமைப்புடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை செய்தி

நேட்டோ ராணுவ குழு தலைவருடன் பாதுகாப்பு செயலர் சந்திப்பு

  • September 2, 2026
  • 0 Comments

நேட்டோ அமைப்புடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. பாதுகாப்புத் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இலங்கை பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, அதிகாரபூர்வ பயணமாக கனடா சென்றுள்ளார். அவர் விக்டோரியாவில் நடைபெற்ற பாதுகாப்பு தளபதிகள் மாநாட்டின் ஒரு பகுதியாக, நேட்டோ இராணுவக் குழுவின் தலைவர் அட்மிரல் கியூசெப்பே காவோ ட்ராகோனுடன் (Admiral Giuseppe Cavo Dragone) இருதரப்புப் பேச்சுக்களை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, ​​இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குதல், […]

யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர். இலங்கை செய்தி

யாழில் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி சேதம்

  • September 2, 2026
  • 0 Comments

யாழ். தெல்லிப்பளையில், வல்லை – அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர். தந்தை செல்வா குடும்பத்தவரது பரம்பரை இடுகாட்டில் இருந்த தூபியின் மேல் பகுதியே சூறையாடப்பட்டுள்ளது. போரின் பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டபோது அங்கு போரின் முன்னர் இருந்த தூபியை ஒத்த தூபி ஒன்று 2012 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இவ்வாறு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் தூபியே […]