ஐரோப்பா செய்தி

ஈரானில் உளவு வழக்கில் சிக்கிய பிரிட்டிஷ் தம்பதியின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு!

ஈரானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டிஷ் தம்பதியினரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனின் East Sussex பகுதியைச் சேர்ந்த Craig Foreman – 53 மற்றும் அவரது மனைவி Lindsay Foreman – 53 ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிள் மூலம் உலகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கடந்த 2025 ஜனவரியில் ஈரானில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அவர்கள் மீது சுமத்தப்பட்ட உளவு குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இந்த குற்றச்சாட்டை தம்பதியினர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை ஈரான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு விசாரணையில் பங்கேற்க தம்பதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தம்பதியினர் தரப்பில் வாதிட முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், தங்களுக்குப் புரியாத மொழியில் இருந்த ஆவணங்களில் கையெழுத்திட அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் அவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு , தம்பதியினரின் விடுதலையை உறுதி செய்யத் தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளது.

இந்த மேல்முறையீட்டு தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகவும், தம்பதியினரை பாதுகாப்பாக தாயகத்துக்கு அழைத்து வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் அதிகாரிகள் , பிரிட்டிஷ் பிரஜைகளை தன்னிச்சையாகக் கைது செய்யும் அபாயம் உள்ளதால், பிரிட்டிஷ் மற்றும் பிரிட்டிஷ்-ஈரான் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ஈரானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தம்பதியினரின் வழக்கு தற்போது ஈரானின் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!