பாகிஸ்தான் வீழ்த்தியது ஆஸ்திரேலியா: நாளை தீர்க்கமான போட்டி!
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
லாகூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன், ஒட்டுமொத்தமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 232 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெதன் எல்லிஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ ஷார்ட் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 44 ஓவர்களில் 190 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் தொடரை சமன் செய்துள்ள ஆஸ்திரேலியா, கோப்பையைத் தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
3 ஆவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.




