காசாவில் மனிதாபிமான அவசரநிலை – உடனடி உதவிகளுக்கு அழைப்பு
காசாவில் உடனடி மனிதாபிமான அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அமைதி வாரியம், அறிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் அவ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான கூடாரங்களும் தற்காலிக முகாம்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், இடம்பெயர்ந்த குடும்பங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையிலேயே அமைதி வாரியம் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது […]



