உலகம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குள் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

  • August 4, 2026
  • 0 Comments

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குள் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (05) மூடப்பட்டிருக்கும். தற்போதைய வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மாகாண கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இலங்கை

இந்த வாரம் முதல் விசேட அரச விடுமுறை இரத்து!

  • April 6, 2026
  • 0 Comments

புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது இரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார். நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.