" வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. செய்தி

இலங்கையில் 11 லட்சம் வழக்குகள் தேக்கம்: சபாநாயகரிடம் முக்கிய பிரேரணை கையளிப்பு

  • August 4, 2026
  • 0 Comments

” வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே,  வழக்குகள் தேங்குவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நிரந்தரத் தீர்வுகளைத் தேடுவதும், சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கும் அத்துடன் சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நிரந்தரத் தீர்வுகளை உடனடியாக முன்மொழிவதற்கும் பாராளுமன்ற […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக எதிர்க்கட்சி தலைவர் கைது

  • August 4, 2026
  • 0 Comments

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையில் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட விவகாரம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் […]

" எமது அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்." - என்று நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்தார். இந்தியா செய்தி

அரசியல் கட்சியாக மாறுமா கரப்பான்பூச்சி இயக்கம்?

  • August 4, 2026
  • 0 Comments

” எமது அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.” – என்று நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு , “மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், சிஜேபி அமைப்பின் […]

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் நாளை (05) முன்வைக்கப்படுகின்றது. இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக அரசின் கன்னி பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு

  • August 4, 2026
  • 0 Comments

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் நாளை (05) முன்வைக்கப்படுகின்றது. இதற்கமைய தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளையும், வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்படுகின்றன. மக்களைக் கவரும், குறிப்பாகப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் புதிய திட்டங்களை பாதீட்டில், தவெக அரசாங்கம் உள்வாங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. தமிழக சட்டப்பேரவை ஆகஸ்ட் ஆம் திகதிகூடும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த ஜூலை 21-ம் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். இலங்கை செய்தி

சட்டத்தரணிகள் சங்கம் கடும் அழுத்தம்: பின்வாங்குமா அரசு?

  • August 4, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: “தனிநபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அரசமைப்புத் திருத்தம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இது குறித்து எம்மிடம் எந்தவித கலந்துரையாடலும் […]

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார். இந்தியா இலங்கை செய்தி

இந்திய வெளிவிவகாரச் செயலர் நாளை இலங்கை விஜயம்

  • August 4, 2026
  • 0 Comments

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து, இந்திய வெளிவிவகாரச் செயலர் விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளார். அத்துடன், வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளையும், இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என தெரியவருகின்றது. இதன்போது, 13 வது திருத்தத்தை முழுமையாக […]

காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹமாஸ் ஆயுதக் களைவு: அமெரிக்காவின் திட்டத்திற்கு இஸ்ரேல் நிபந்தனை

  • August 4, 2026
  • 0 Comments

காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட ‘அமைதி வாரியத்தின்’ (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “ஹமாஸ் அமைப்புடன் சமீபத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதியு டிரம்ப்புடன் எனக்குக் கருத்து வேறுபாடுகள் உள்ளன, அதை நான் மறைக்க விரும்பவில்லை” என்று நெதன்யாகு கூறினார். மேலும், “மறுசீரமைப்பு கட்டத்திற்குச் செல்வதற்கு முன், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் களைய வேண்டும் […]

ஆஸ்திரேலியா, சிட்னியின் பிரதான பொழுதுபோக்கு பகுதியில், போலியான துப்பாக்கியை ஏந்திச் சென்று மக்களிடையே பெரும் பீதியையும் அப்பகுதி முடக்கத்தையும் (Lockdown) ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் போலி துப்பாக்கி ஏந்தி மக்களை மிரட்டியோர் கைது

  • August 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னியின் பிரதான பொழுதுபோக்கு பகுதியில், போலியான துப்பாக்கியை ஏந்திச் சென்று மக்களிடையே பெரும் பீதியையும் அப்பகுதி முடக்கத்தையும் (Lockdown) ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் மூர் பார்க் பொழுதுபோக்கு பகுதியில் (Moore Park Entertainment Quarter), அமெரிக்கக் கொடி பொறிக்கப்பட்ட குண்டுதுளைக்காத உடையும், நெஞ்சில் துப்பாக்கி போன்ற அமைப்பும் நாடாவால் (tape) ஒட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உணவகங்களுக்குள் நுழைந்தும் வெளியேறியும் உலா வந்துள்ளார். இதனைக் கண்ட பல சாட்சிகள் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை செய்தி

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பு

  • August 4, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கண்டிக்கு விஜயம் செய்து, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் கலந்துரையாடினர். இதன்போதே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, “நீதிபதிகளின் […]

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான 'ஜனநாயகச் செயல் கட்சி' (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை வரும் ஆகஸ்ட் 16-ஆம் திகதி தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மலேசிய அரசியலில் திருப்புமுனை: ஆகஸ்ட் 16-ல் DAP கட்சியின் அதிரடி முடிவு

  • August 4, 2026
  • 0 Comments

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ‘ஜனநாயகச் செயல் கட்சி’ (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை வரும் ஆகஸ்ட் 16-ஆம் திகதி தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஆளும் கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாகவும், சிறுபான்மையின மக்கள் மற்றும் முற்போக்கு வாக்காளர்கள் மத்தியில் அதிக ஆதரவு கொண்ட கட்சியாகவும் விளங்கும் DAP, சமீபகாலமாக மக்கள் ஆதரவை இழந்து வருகிறது. ஊழல் வழக்குகள், இனம் மற்றும் […]