இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இலங்கை, வியட்நாம் ஆராய்வு!

  • May 9, 2026
  • 0 Comments

வியட்நாம் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான General Phan Van Giang இற்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கும் இடையில் கொழும்பில் நேற்று உயர்மட்ட இராஜதந்திர கலந்துரையாடல் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், வியட்நாம் அரசாங்கத்திற்கும் வருகை தந்திருந்த பிரதிநிதிகள் குழுவிற்கும் அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக தனது மனமார்ந்த […]

உலகம் செய்தி

ஈரான் தொடர்பில் அமெரிக்கா முன்மொழிந்த யோசனைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மேற்கொண்டுள்ள தடையை நிறுத்தக் கோரி அமெரிக்கா மற்றும் பஹ்ரைன் ஐ.நாவில் முன்மொழிந்த தீர்மானத்தை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது. மேற்படி தீர்மானத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்திய ரஷ்யா, அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் வன்முறையற்ற தீர்வுகளை வலியுறுத்தும் ஒரு மாற்றுத் திட்டத்தை சீனாவுடன் இணைந்து முன்வைத்துள்ளது. வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவு அளித்தாலும், ஐநா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாக ரஷ்யா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. தற்போதைய சூழலில் அமெரிக்காவின் இந்த […]

இந்தியா செய்தி

இந்தியாவின் முப்படைகளுக்கு புதிய தலைமை தளபதி நியமனம்!

  • May 9, 2026
  • 0 Comments

இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30ஆம் திகதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். மேற்படி பதவியை தற்போது வகிக்கும் தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையிலேயே, இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜா சுப்ரமணிக்கு, இந்தியாவின் மேற்கு மற்றும் […]

செய்தி விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்துமா குஜராத்?

  • May 9, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 52 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளை பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி (0.510) 4-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் (-0.147) 5-வது இடத்திலும் […]

செய்தி விளையாட்டு

டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

  • May 9, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பெதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்களைப் பெற்றார். […]

இலங்கை செய்தி

யாழ்.வைத்தியசாலைக்கு விரைந்த ஆளுநர்: மருந்து தட்டுப்பாடு குறித்து அச்சம் வேண்டாம்!

  • May 9, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி , தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார். அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

தீ விபத்தால் யாழ். வைத்தியசாலையில் பேரிழப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. சுமார் 5 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இன்று சனிக்கிழமை அதிகாலைவேளையில் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியிலேயே தீப்பரவல் ஆரம்பமாகியுள்ளது. தீயை அணைக்க வைத்தியசாலை ஊழியர்களுடன் இணைந்து மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் எனப் பல தரப்பினர் தீவிர […]

உலகம் செய்தி

‘நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தத் தயாரில்லை’ – பதவி விலக பிரதமர் மறுப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

இக்கட்டான சூழலில் தான் பதவி விலகி நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தத் தயாரில்லை எனப் பிரதமர் கீயர் ஸ்டார்மர் (Keir Starmer) திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் லேபர் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என அக்கட்சியின் எம்.பி-க்கள் சிலரே பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர். வேல்ஸ் பகுதியில் கடந்த 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த லேபர் கட்சி, இம்முறை தனது அதிகாரத்தை இழந்துள்ளது. இங்கிலாந்தில் […]

உலகம் செய்தி

செம்மணியில் நேற்றும் எலும்புக்கூடு அடையாளம்: இன்றும் அகழ்வுப் பணி!

  • May 9, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று சிறுவன் ஒருவனுடையது எனச் சந்தேகிக்கப்படும் மனித என்புத் தொகுதி ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 260 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11ஆம் நாள் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. இதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த […]

உலகம் செய்தி

பிரதமர் பதவி விலக வேண்டும்: லேபர் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்து!

  • May 9, 2026
  • 0 Comments

உள்ளாட்சிசபைத் தேர்தலில் லேபர் கட்சிக்கு ஏற்பட்ட கடும் பின்னடைவை தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் Keir Starmer கடும் தலைமைத்துவ சவாலை எதிர்கொண்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என 20 வரையான லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ” பிரதமர் Keir Starmer ஆல்தான் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவர் கட்சியை தொடர்ந்து வழிநடத்தினால் நாங்கள் முற்றிலும் அழிந்துவிடுவோம்.” என்று லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ” வாக்காளர்கள் லேபர் […]

error: Content is protected !!