இந்தியா இலங்கை செய்தி

ஈரானுக்கான தூதுவராக பேராசிரியரை களமிறக்கியது இலங்கை

ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இவருடைய நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்திருந்தது.எனினும், போர் சூழ்நிலையால் பதவியேற்பில் தாமதம் ஏற்பட்டது.

ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

மாவனெல்லை ஜாஹிரா கல்லூரியின் பழைய மாணவியான இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார்.

அங்கு புவியியல் துறைக்காக 1995ஆம் ஆண்டில் முதலாம் வகுப்புத் தேர்ச்சியுடன் தனது இளங்கலை (BA) பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

அதன் பின்னர், அவர் 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTNU) வழங்கும், வளரும் நாடுகளின் சமூக மாற்றம் (அபிவிருத்தி ஆய்வுகள்) குறித்த தத்துவமாணி (MPhil) பட்டத்தைப் படிப்பதற்கான கல்வித்தொகையை 1997இல் பெற்றார்.

அதே பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் கலாநிதி (PhD) பட்டத்தைப் படிப்பதற்கான கல்வித்தொகையையும் 2004ஆம் ஆண்டில் அவர் பெற்றுக்கொண்டார்.

பின்னர், அதே நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2016 முதல் 2018 வரையிலான காலப்பகுதியில் தனது போஸ்ட்-டாக்டோரல் (Postdoctoral) உயர்கல்வியையும் அவர் நிறைவு செய்துள்ளார்.

1996ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தனது சேவையைத் தொடங்கிய பேராசிரியர் ஃபசீமா, 2001ஆம் ஆண்டில் தரம் II சிரேஷ்ட விரிவுரையாளராகப் (Senior Lecturer Grade II) பதவியுயர்வு பெற்றார் எனப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை