இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

நாளை ஆஸ்திரேலியா செல்கிறார் மோடி – பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

  • July 7, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குரிய பயணத்தை பிரதமர் மோடி நேற்று ஆரம்பித்தார். முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியா வரவுள்ளார். ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமுகத்தினர், நாளை வியாழக்கிழமை மெல்போர்னுக்கு வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பிரம்மாண்டமான பாலிவுட் பாணி நிகழ்வோடு வரவேற்க தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியா-இந்தியா வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் ஜூலை 8 முதல் […]

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு என்பது வெறும் தேசிய அளவிலான விடைபெறல் மட்டுமல்ல, தெஹ்ரானில் திரண்டிருந்த அந்த மக்கள் பெருங்கடல், இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த நினைத்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வீழ்த்த நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் கற்பித்த ஈரான் மக்கள்

  • July 6, 2026
  • 0 Comments

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு என்பது வெறும் தேசிய அளவிலான விடைபெறல் மட்டுமல்ல, தெஹ்ரானில் திரண்டிருந்த அந்த மக்கள் பெருங்கடல், இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த நினைத்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கிய போரினால் ஈரான் பலவீனமடைந்ததாகத் தெரியவில்லை. மாறாக, அது சவால்களுக்கு அடிபணியாத, ஒன்றுபட்ட, தங்களின் அடுத்தகட்ட நகர்வை தாங்களே […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கை செய்தி

பதவி விலகுமாறு நீதி அமைச்சருக்கு அழுத்தம்

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பதவியை விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று (06) வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் சுமார் 600 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். ஆனால், அங்கு 2,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர். இந்த இடநெருக்கடிப் பிரச்சினை நீண்டகாலமாகவே நிலவி வருகின்றது. எனவே, தற்போதைய […]

இலங்கை செய்தி

சிறைக்குள் நடந்தது என்ன? விசாரணை தீவிரம்

  • July 6, 2026
  • 0 Comments

07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகள் உயிரிழப்புநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. 23 அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் என்பன விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன எனவும் அமைச்சர் கூறினார். நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் அதனைசூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

“வரி சக்தி 2026” எனும் தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையில் தேசிய வரி வாரம் ஆரம்பம்

  • July 6, 2026
  • 0 Comments

“வரி சக்தி 2026” எனும் தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையான எண்ணமாக மாற்றி, நாட்டில் சுயமாக வரி செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் “வரி சக்தி 2026” என்பது ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஒரு வேலைத்திட்டமாகும். இதன் ஆரம்பத்தைக் குறிக்கும் விசேட தேசிய வரி வாரம் […]

போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும்,காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் இஸ்ரேல்

  • July 6, 2026
  • 0 Comments

போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும்,காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு காசாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் உள்ள அல்-ரஷித் வீதியில் பயணித்த வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் (Dis drone) தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி […]

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2026 ஜூன் 22ம் திகதி திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் மூலம் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே இராஜினாமா செய்த ஆறாவது நபர் ஆனார். ஐரோப்பா செய்தி

அச்சுறுத்தும் ரஷ்யா: பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஐஸ்லாந்துக்கு விஜயம்

  • July 6, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2026 ஜூன் 22ம் திகதி திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் மூலம் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே இராஜினாமா செய்த ஆறாவது நபர் ஆனார். நவீன பிரித்தானிய அரசியலில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாக, ஒரு தசாப்தத்தில் ஏழாவது பிரதமரை எதிர்கொள்ளும் நிலையை மக்கள் இப்போது எதிர்கொள்கின்றனர். மேலும், பெரும்பாலான விவாதங்கள் புதிய பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் ஆண்டி பர்ன்ஹாமைச் சுற்றியே இருந்தாலும், ஸ்காட்லாந்து அரசியலில் பெரும் விளைவுகள் ஏற்பட […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கை செய்தி

சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிறைச்சாலையின் நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை தொடர்பில் நான் ஆழ்ந்த கவலையடைகின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார். […]

பிரித்தானியா வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான தனது விதிகளைக் இன்று முதல் கடுமையாக்கியது. ஐரோப்பா செய்தி

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா

  • July 6, 2026
  • 0 Comments

பிரித்தானியா வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான தனது விதிகளைக் இன்று முதல் கடுமையாக்கியது. ரஷ்ய ஆதரவுப் பேச்சுகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவதற்காக இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, ரிஃபார்ம் யுகே கட்சியின் முன்னாள் அரசியல்வாதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதி நடைமுறைக்கு வந்துள்ளது. அரசியலில் வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு அரசாங்கம் உத்தரவிட்டது. ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகள், நாட்டின் ஜனநாயகத்தில் செல்வாக்கு செலுத்தவும் அதனைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கும் […]

உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இங்கிலாந்து இடம்பிடித்துள்ளது. எனினும் அமெரிக்கா அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது. ஐரோப்பா செய்தி

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடங்களில் பிரித்தானியா

  • July 6, 2026
  • 0 Comments

உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இங்கிலாந்து இடம்பிடித்துள்ளது. எனினும் அமெரிக்கா அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான உலக கடவுச்சீட்டுத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதல், குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் மூலம் குளோபல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் இந்த ஆண்டு அறிக்கையைத் தொகுத்து வருகிறது. இந்தத் தரவரிசையானது, 197 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கடவுச்சீட்டுகளை வரிசைப்படுத்தி, மேம்பட்ட பயண வசதி, முதலீடு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியப் பரிமாணங்களில் பயண ஆவணங்களின் […]