இலங்கையில் 15 நாட்களுக்குள் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு டெங்கு
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 17, 051 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 38, 160 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




