புற்றுநோயை கண்டறியும் செயல்முறையை எளிதாக்கிய சீனா!! வீட்டிலேயே பரிசோதனை செய்யலாம்!
ஒரு துளி இரத்தத்தில் இருந்து நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய உதவும் வகையிலான தொலைப்பேசி ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகும், இது நோயை எளிதாகவும் சரியான நேரத்திலும் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயைக் கண்டறிய பொதுவாகப் பெரிய கருவிகள் தேவைப்படுவதால், பரிசோதனைகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இது நோயை குணப்படுத்துவதிலும் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது.

இதற்கு தீர்வாக தொலைப்பேசி வடிவிலான கருவியை சீன விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்தப் புதிய கருவியில் உள்ள ஒரு சென்சார், மூலக்கூறுகள் ஒளியை பயன்படுத்தி புற்றுநோயை கண்டறிய உதவி செய்கிறது. இதற்கு 3D சிப் பயன்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் புற்றுநோயை எளிதாக வீட்டிலேயே கண்டறிய முடியும். வழக்கமான ஆய்வகப் பரிசோதனைகளுடன் ஒப்பிடும்போது, உணர்திறனில் கிட்டத்தட்ட “10,000 மடங்கு மேம்பாட்டிற்கு” இது சமமாக தொழிற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்கள் சயின்ஸ் எக்ஸ் டயலாக் இதழில் (Science X Dialog) பிரசுரிக்கப்பட்டுள்ளன.





