ஐரோப்பா செய்தி

மரண தண்டனைக்கு ஆதரவு!!! இங்கிலாந்து மாணவர்களின் மனநிலையில் மாற்றம்!

பிரித்தானிய மாணவர்களில் ஏறக்குறைய பாதி பேர் மரண தண்டனை மீண்டும் கொண்டுவரப்படுவதை ஆதரிப்பதாக கணக்கெடுப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது.

18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளங்கலைப் பட்டதாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில்,   47 சதவீதமானோர் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதேநேரம்  46 சதவீதத்தினர் எந்தவொரு குற்றத்திற்கும் அதை எதிர்ப்பதாக கூறியுள்ளனர்.

1969 ஆம் ஆண்டின் இறுதியில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது. பீட்டர் அந்தோனி ஆலன் (Peter Anthony Allen)  மற்றும் க்வின் ஓவன் எவன்ஸ் (Gwynne Owen Evans ) ஆகிய இருவரே பிரித்தானியாவில் கடைசியாக தூக்கிலப்பட்டனர்.  அவர்கள் ஆகஸ்ட் 1964-ல் தூக்கிலிடப்பட்டனர்.

இதேவேளை அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 27இல்  மரண தண்டனை இன்னும் சட்டப்பூர்வமாக உள்ளது, ஆனால் 11 மாகாணங்கள் “நடைமுறையில் மரணதண்டனை ஒழிப்பு” கொள்கையைக் கொண்டுள்ளன . அதாவது, அவை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரணதண்டனையை நிறைவேற்றவில்லை.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!