இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானம் கொள்வனவு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் ஏ-320 விமானம் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (21.12) விமானம் கொண்டு வரப்பட்டதுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி மாலைத்தீவுக்கு விமானம் தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.

இந்த விமானத்துடன்,  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 22 ஆகும்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் மற்றொரு ஏர்பஸ் ஏ-330 விமானத்தையும், மார்ச் மாதத்தில் மற்றொரு ஏர்பஸ் விமானத்தையும் குத்தகை அடிப்படையில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போது பாவனையில் இல்லாத 02 விமானங்களுக்கு இரண்டு இயந்திரங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்